
இந்தியாவில் பிஸ்கட் தயாரிப்பின் முன்னணியில் இருக்கும் பிரிட்டானியா இன்டஸ்டிரீஸ், தனத சென்னை தொழிற்சாலையில் நடந்து வந்த பிஸ்கட் தயாரிப்பை நிறுத்தி விட்டது. ஏப்ரல் 7ம் தேதியில் இருந்து இங்கு தயாரிப்பு நிறுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தையில் தெரிவித்திருக்கிறது. சென்னை தொழிற்சாலையில் மாதத்திற்கு 1000 டன் பிஸ்கட் தயாரிக்கப்பட்டு வந்தது. இப்போது அங்கு தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டதால், அவுட்சோர்சிங் முறையில் அவர்களுக்கு பிஸ்கட் தயாரித்து கொடுக்கும் வேறு தொழிற்சாலை மூலம் இந்த ஆயிரம் டன் பிஸ்கட்டை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மாதத்திற்கு 48,000 டன் பிஸ்கட் உற்பத்தி செய்யும் பிரிட்டானியா இன்டஸ்டிரீஸ், 40,000 டன் பிஸ்கட்டை அவுட்சோர்சிங் முறையில்தான் செய்து வாங்கு கிறது. சென்னை தொழிற்சாலையில் தயாரிப்பு நிறுத்தப்பட்டது பற்றி பிரிட்டானியா இன்டஸ்டிரீஸ் இன் தலைமை நிதி அதிகாரி துர்கேஸ் மேத்தா தெரிவித்தபோது, உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு தயாரிப்பு முறையில் நாங்கள் வழக்கமாக கடைபிடிக்கும் சில வழிமுறைகளில் ஒன்று தான் இது என்றார். மேலும் இங்கு வேலை பார்த்து வந்த சுமார் 200 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தில் கீழ் சுமார் ரூ.5 கோடி வரை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார். சென்னை தொழிற்சாலையை மூடியதில் நாங்கள் எந்த பிரச்னையும் சந்திக்கவில்லை என்றும், இந்த திட்டத்தை பெரும்பாலான ஊழியர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்றும் பிரிட்டானியாவின் மேலாண்மை இயக்குனர் வினிதா பாலி தெரிவித்தார். இது, பிரிட்டானியா மூடும் இரண்டாவது தொழிற்சாலை. ஏற்கனவே தொழிலாளர் பிரச்னையால் மும்பையில் உள்ள அவர்களது தொழிற்சாலையை சமீபத்தில் மூடினார்கள். 
![]()
Wednesday, 9 April 2008
பிரிட்டானியாவின் சென்னை தொழிற்சாலை மூடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment