அரசாங்க அமைச்சர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தாக்குதலை அடுத்து மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என விசேட புலனாய்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்க தரப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு முக்கிய அமைச்சர்களை அரசாங்கம் கிழக்கில் களமிறக்க உத்தேசித்திருந்த நிலையில் புலனாய்வு பிரிவின் இந்த எச்சரிக்கை அரசாங்கத்தின் தேர்தல் வியூகங்களை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே நாள், வெசாக் உட்பட அனைத்து பொது நிகழ்வுகளிலும் அரசாங்க அமைச்சர்கள் கலந்து கொள்வதை தடை செய்யும் நடவடிக்கைக்கு ஜனாதிபதியிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
thanks :inayam

No comments:
Post a Comment