அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ள தாக்கதல் பற்றி கருத்த வெளியிட்ட காவல் துறையினர் தமக்கு அமைச்சர் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வது தெரியாது எனவும் இதனால்தான் தாம் பாதுகாப்பு முறையாக வழங்க வில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
இது ஏற்றுகக் கொள்ளக்£கூடிய காரணம் அல்ல எனக்கருத்துப்பட இக்பால் அதஸ் தனது வாரந்தக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் சுவரொட்டிகள்ணு, துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து பொது மக்களுக்கும் தெரிந்தது குறிப்பாக தாக்குதல்தாரருக்கு தெரிந்தது ஏன் காவல் துறையுனருக்கு தெரியாமல் போனது என்பதே இவரின் நியாயமான கேள்வியாகும்.
கருப்பு ரி - சேரட்டும் முழங்காலுக்கும் பாதத்திற்கும் நடுவரை வரும் முக்கால் கால்சட்டையும் இணழந்திருதிருந்த 35 வயதுக்குட்பட்ட ஒரு இயைஞன் அதிகாலையில் இருந்தே அப்பகுதியில் நடந்து திரிந்ததாகவும் இவரே இத்தற்கொலைத்தாக்குதலை புரிந்திருக்கலாம் எனவும் கட்டரையில் குறிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 862763479 V வெள்ளைத்தம்பி மொகமட் அமீன் என்ற பெயரையும் வாழைச்சேனையை இடமாகவும் கொண்ட அடையாள அட்டை பொய்யானதால் தற்போது காவல் துறையினர் ஸ்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட தொலைபேசி சிம் கார்ட்டை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். முன்னய குண்டு வெடிப்பைப்போல் இல்லாமல் இம்முறை உலோகச்சன்னங்கள் குணடில் கலக்கப்படவில்லை தனியா வெடிபொருட்கள் மட்டுமே இருந்துள்ளது.
அததுடன் கண்டியில 60 கி.கி எடையான குண்டு பற்றி குறிப்பிடும் போது வெல்ல வாரியல் 5 கி.கி எடையான குண்டே வெடித்தது. எனவே 60 கி.கி. வெடித்திருந்தால் விளைவு பாரதூரமானதாக இருந்திருக்கும எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, 13 April 2008
தாக்குதல்காரருக்கு தெரிந்தது ஏன் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியவில்லை ? இக்பால் அதாஸ் கேள்வி.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment