கான்பூர்: பரிசு கொடுத்தது தப்பா...என கேப்டன் தோனியை புலம்ப வைத்து விட்டனர். கான்பூர் ஆடுகள பராமரிப்பாளருக்கு இவர் ரூ. 10 ஆயிரம் பரிசாக அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக அதிரடியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கான்பூரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. மூன்றே நாளில் வென்ற இந்தியா, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இப்போட்டி துவங்குவதற்கு முன்பாகவே ஆடுகளம் பற்றி பிரச்னை எழுந்தது.
இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பதாக தென் ஆப்ரிக்க வீரர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர். இதனை இந்திய கிரிக்கெட் போர்டு மறுத்தது. ஆனாலும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெருமளவில் கைகொடுத்தது. முதல் நாளில் இருந்தே களத்தில் வெடிப்புகள் காணப்பட்டன. இதனை "சுழல்' வீரர்கள் சூப்பராக பயன்படுத்திக் கொண்டனர். உதாரணமாக ஹர்பஜன் 7 விக்கெட் வீழ்த்தி வெற்றி நாயகனாக ஜொலித்தார். இவரை தவிர சேவக், யுவராஜ் உள்ளிட்ட பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்கள் கூட விக்கெட் வேட்டை நடத்தினர்.
பி.சி.சி.ஐ., ஆதரவு: இப்படி ஒரு அருமையான ஆடுகளம் அமைத்து கொடுத்த பராமரிப்பாளர் ஷிவ் குமாரை பாராட்டி கேப்டன் தோனி ரூ. 10 ஆயிரம் பரிசு அளித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்னையில் கேப்டன் தோனிக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு "டிப்ஸ்' அளிப்பது சகஜமான விஷயம். தோல்வி அடைந்தால் கூட "டிப்ஸ்' தருவது உண்டு. வீரர்கள் அனைவரும் சேர்ந்து வசூலித்து ஒரு தொகையை பராமரிப்பாளர்களுக்கு கொடுப்பார்கள். எனவே, தோனி நடத்தை விதிமுறைகள் எதையும் மீறவில்லை,'' என்றார்.
ரூ. 2 ஆயிரம் கிடைக்கும்: கான்பூர் டெஸ்ட் போட்டியின் அமைப்பாளர் ஒருவர் கூறுகையில்,""மைதான பராமரிப்பாளர்கள் நான்கு அல்லது 5 பேருக்கு சேர்த்து தான் தோனி பரிசு கொடுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் ரூ. 2 ஆயிரம் வரை கிடைக்கலாம். இது என்ன பெரிய தொகையா? வீணாக பிரச்னை கிளப்புகிறார்கள்,'' என்றார்.
Tuesday, 15 April 2008
தோனிக்கு புதிய சிக்கல்!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Doni is stumped!
Indians Always live with tips or bribe.
Hindu Ram, Jeyalaitha, Cho, Ind High Com Officials in SL, a few other Indian reporters in SL - all the above regularly gets Tips from SL govt to send anti-Tamil messages to India, Indians and Indian Terrorists in south block.
Mr.Anonymous!
U can straight away say,that M.K.NArayanan/national security advisor is a malayale;he speaks something@Tamilnadu and something else @Kerala!
what to do?we all voted for congress with a hope that they will do good to tamilcommunity;now we know the colour of congress/throught my life I will not vote for congress!
Post a Comment