`குசேலன்' படப்பிடிப்பில், நடிகை நயன்தாரா மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஓய்வு இல்லை
நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறார். கடந்த வாரம் அவர் சென்னையில் நடந்த `சத்யம்' படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அந்த படத்தில், விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.
இரண்டு பேரும் மழையில் நனைந்தபடி ஆடிப்பாடுவது போன்ற பாடல் காட்சியை, ஏவி.எம்.ஸ்டூடியோவில் 4 விதமான அரங்கு அமைத்து படமாக்கினார்கள். டான்ஸ்மாஸ்டர் பிருந்தா மேற்பார்வையில், 4 நாட்கள் இரவு-பகலாக படப்பிடிப்பு நடந்தது. 4-வது நாள் படப்பிடிப்பு காலை 9 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 4 மணிவரை தொடர்ந்து நடந்தது.
`குசேலன்'
நயன்தாரா, செயற்கை மழையில் நனைந்தபடி நடித்து முடித்தார். படப்பிடிப்பை முடிந்ததும் அவர் அவசரம் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு காலை 7 மணி விமானம் மூலம் ஐதராபாத் பறந்தார். அங்கு நடைபெற்ற `குசேலன்' படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
அதுவும் பாடல் காட்சிதான். ராமோஜிராவ் பிலிம்சிட்டியில், ரூ.3 கோடி செலவில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்த்-நயன்தாராவுடன் ஏராளமான நடன அழகிகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்கள். இந்த பாடல் காட்சிக்கும் டான்ஸ்மாஸ்டர் பிருந்தாவே நடனம் அமைத்தார்.
டாக்டர் வந்தார்
பகல் ஒரு மணி அளவில் நயன்தாரா தனக்கு தலை சுற்றுவதாக கூறினார். உடனே நாற்காலியில் போய் சாய்ந்துகொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, டாக்டர் வரவழைக்கப்பட்டார்.
நயன்தாராவை பரிசோதித்த டாக்டர், குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாகவும், சரியாக சாப்பிடாததாலும், தூங்காததாலும் நயன்தாராவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவரை, ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி டாக்டர் கூறினார்.
ஆனால், டாக்டர் கேட்டுக்கொண்டபடி நயன்தாரா ஓய்வு எடுக்கவில்லை. தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
மயங்கி விழுந்தார்
நேற்று காலையில் நயன்தாரா வழக்கம்போல் படப்பிடிப்புக்கு வந்தார். படப்பிடிப்பு தொடங்கிய சில நிமிடங்களில், அவர் தலை சுற்றுவதாக கூறினார். அப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக நயன்தாராவை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ``ஓய்வு எடுத்துக்கொள்ளாததால்தான் நயன்தாராவுக்கு மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் நன்றாக தூங்கினாலே போதும். குணமாகி விடுவார்'' என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
Tuesday, 22 April 2008
`குசேலன்' படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா மயங்கி விழுந்தார் ஆஸ்பத்திரியில் அனுமதி
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
தல,
என்ன தல சொல்றீங்க? தலைவிக்கு இப்படி ஒரு சோகமா? சிபியண்ணே, ஜேகே தம்பி எல்லாம் கிளம்புங்கப்பூ.. தலைவிக்கு ஒடம்பு சரியில்லையாமுல்ல..
ussh....sh..Nayanthara,not taking"BATH"
Post a Comment