Saturday, 19 April 2008

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள்; மீது அனுதாபம்?

eu1.jpgஇலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையானது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கையின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவரை கோடிட்டு அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் மீது அனுதாபத்தை கொண்டுள்ளது. இது இந்தியா வல்லரசாக இருந்த போதும் சிறிய குழுவான தமிழீழ விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலுக்கு காரணமாக அமையலாம் என குறித்த அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

ttpian said...

Govt.of Srilanka started moving hand in hand with China&Pakisthan-this is the major threat for India!
If Europian union support LTTE,this will not have any setback in the security concern of India!
Pakisthan was expelled from Commonwealth;similar way,pakisthan's regional gunda,srilanka should be expelled from Commonwealth!