Tuesday, 22 April 2008

கடத்தப்பட்ட பெண் தொடர்பில் உடன் நடவடிக்கை: நீதவான் பணிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளை வான் ஆயுததாரிகளினால், 03.03.2008 அன்று கடத்திச் செல்லப்பட்ட, 16 வயது நிரம்பிய நற்குணம் புஸ்பராணி என்பவர் தெர்ர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கல்குடா காவற்துறையினருக்கு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் மாணிக்வாசகர் கணேஷராஜ் இன்று 22.04.2004 செவ்வாய்க்கிழமை கட்டளை பிறப்பித்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறும், சம்பவத்துடன் தொடர்புடைய, ஆயுததாரிகளை கைது செய்து மேலதிக அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் தனது உத்தரவில் நீதவான் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக மட்டக்களப்பு பிராந்திய பிரதி காவற்துறை மா அதிபருக்கும் அறிவித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணித்துள்ளார்.

அத்துடன் 04.03.2008ஆம் திகதி 15 வயது நிரமிபய் பேரானந்தம் யசோதா என்பவர் தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபரிடம்; அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments: