Tuesday, 22 April 2008

வைகோ :ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகத்துடனான சந்திப்பைத் தடுப்பதற்கு இலங்கை அரசு முயற்சி!

இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வை. கோபால்சாமியின், ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகத்துடனான சந்திப்பைத் தடுப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் வைகோ, ஐ.நா.செயலருக்குத் தெரிவிக்கும் கருத்து பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்கும் என்பதால் அரசு இது விடயத்தில் இராஜதந்திர ரீதியில் தலையிடுமென இலங்கை அரசின் மூத்த அமைச்சரொருவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை அறிவுறுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

1 comment:

ttpian said...

Nobody can block the S U N