Friday, 25 April 2008

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்கள் இனி அங்கு தாராளமாக வேலை பார்க்க அனுமதி

மெல்பர்ன் : ஆஸ்திரேலியா செல்லும் இந்திய மாணவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. இனிமேல் அங்கு படிக்க செல்லும் அவர்கள் அங்கு தாராளமாக பகுதி நேர வேலை பார்க்கலாம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக் கிறது.

ஒர்க் பெர்மிட்காக இனிமேல் அவர்கள் தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை. விசா கொடுக்கும்போதே ஒர்க் பெர்மிட்டும் சேர்த்து கொடுக்கப்படும். ஆனால் எவ்வளவு மணி நேரம் பகுதி நேர வேலை பார்க்கலாம் என்ற கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எல்லா நாட்டு மாணவர்களும் அங்கு படிக்கும் காலத்தில் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்தார்.

மாணவர்கள் அவர்களது படிப்பு ஆரம்பமானதும் உடனடியாக பகுதிநேர வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். இப்போது அங்கு நிலவி வரும் ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தில் இருந்து ஸ்டூடன்ட் விசாவுக்கு விண்ணப்பிப்ப வர்களுக்கு புது நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: