சென்னை : ஹீரோ ஹோண்டா நிறுவனம் அதிக அளவு மோட்டார் சைக்கிள்கள் விற்று சாதனை புரிந்துள்ளது. ஹீரோ ஹோண்டா நிறுவனம் உலகின் அதிக மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 33 லட்சத்து 37 ஆயிரம் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 33 லட்சத்து 36 ஆயிரம். மோட்டார் சைக்கிள் விற்பனை 10 சதவீதம் அளவு குறைந்தாலும் ஹீரோ ஹோண்டா விற்பனையை அதிகரித்துள்ளது என்று நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் தெரிவித்தார்.ஹீரோ ஹோண்டா மார்ச் மாதத்தில் மட்டும் 3.20 லட்சம் மோட்டார்சைக்கிள் விற்பனை செயதுள்ளது. முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை 2.77 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவுக்கு ஒரு முன்னேற்ற ஆண்டாகும். மொத்த விற்பனையில் 52 சதவீத மார்க்கெட் இடத்தை ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் பிடித்துள்ளது.ஹீரோ ஹோண்டா புதுமை டிசைன்களில் மோட்டார் சைக்கிள் அறிமுகம், நவீன விற்பனை முறை, கிரிக்கெட் கேளிக்கை துறைகளில் விளம்பரம் மூலம் விற்பனையை நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Saturday, 5 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment