ஏகனுக்கு 'பஞ்ச்' ரெடி! ஏகன் படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் படு வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் இடம் பெறும் பஞ்ச் வசனங்கள்தான் இப்போது டாக் ஆப் தி டவுன் ஆகியுள்ளது.
அஜீத் ரசிகர்கள் இருவர் எங்காவது சந்தித்துக் கொணாடால் இப்போதெல்லாம் பேசிக்கொள்வது இதுதான்....
'எமன்கிட்டயிருந்து தப்பிக்கலாம்... ஆனா ஏகன்கிட்டருந்து தப்பிக்கவே முடியாது!'
பஞ்ச் வசனங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்த புண்ணியம் ரஜினிக்குத்தான் சேரும். அதன் பின்னர் படத்தில் கதை இருக்கிறதோ, இல்லையோ கண்டிப்பாக பஞ்ச் வசனங்கள் இருந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறி விட்டது.
ரஜினியை அப்படியே காப்பி அடித்து விஜய் படங்களில் பஞ்ச் வசனங்கள் சரமாரியாக இடம் பெற்றன. மற்ற நடிகர்களும் இதில் விதி விலக்கல்ல. கிங்காங் முதல் பெரிய நடிகர்கள் வரை அத்தனை பேரும் ஆளாளுக்கு பஞ்ச் பண்ண ஆரம்பித்து விட்டனர்.
கமல் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களில்தான் பஞ்ச்சை அதிகம் பார்க்க முடியாத நிலை உள்ளது.
சிவாஜியில் அவருக்குப் பதில் விவேக்கை விட்ட பஞ்ச் பண்ண வைத்தார் ஷங்கர். ரஜினியும் தனது பங்குக்கு பன்னிங்கதான் கும்பலா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும் என்று கலக்கினார்.
இந்த நிலையில் ஏகன் படத்தில் அஜீத்துக்கு ஏகப்பட்ட பஞ்ச் வசனங்
களை எழுதி தள்ளியுள்ளாராம் வசனகர்த்தா கிரேஸி மோகன். இதில் சிலவற்றை அஜீத் ரசிகர் மன்ற தலைகளுக்கும் இப்போதே சொல்லிவைத்து விட்டார்களாம். இதோ சாம்பிளுக்கு சில...
'பாம்பைக் கண்டா படையே நடுங்கும, ஏகனைக் கண்டா எமலோகம் நடுங்கும்'
'சத்தமா பேசாதே, சுத்தமா பிடிக்காது, மொத்தமா அழிச்சிருவேன்'
'எவனும் அடிச்சா எக்குத்தப்பா வலிக்கும், ஏகன் அடிச்சா எமனுக்கே வலிக்கும்'
கடைசி பஞ்ச் மட்டும் நம்மளோடது!!
Friday, 11 April 2008
'சத்தமா பேசாதே, சுத்தமா பிடிக்காது, மொத்தமா அழிச்சிருவேன்' -ஏகன் 'பஞ்ச்'
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
>>>>கமல் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களில்தான் பஞ்ச்சை அதிகம் பார்க்க முடியாத நிலை உள்ளது.
he he HEH
Post a Comment