Wednesday, 9 April 2008

சத்யராஜ் நடித்த திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் திரையிட அனுமதிக்கமாட்டோம்--சிவசேனை

நடிகர் சத்யராஜ் நடித்த திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என சிவசேனை கட்சியின் மாநில துணைத் தலைவர் துரை.திருவேங்கடம் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அவர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் கன்னடர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தமிழ்த் திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களை அடித்து நொறுக்கினர்.

கன்னடர்களின் இந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் திரையுலகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதில் பேசிய நடிகர் சத்தியராஜ் தேசீயத்திற்கு விரோதமாகப் பேசியுள்ளார். அவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. அவர் நடித்த படத்தை திரையிட சிவசேனைத் தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்றார் அவர்

1 comment:

வசந்தத்தின் தூதுவன் said...

ஐயோ இவனெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டான் பார்ரா...
யாரும் கவலைப் பட வேண்டியதில்லை. இவன் சொன்னது சிவசேனை தொண்டர்கள் தானே? சிவசேனை தொண்டர்கள் மராட்டியதிலே இருப்பதாக கேள்வி. இவனையும் அங்கேயே அனுப்பி சத்யராஜ் படம் எதுவும் ஓட விடாமல் தியேட்டர் வாசலில் துண்டு போட்டு உட்கார வைச்சுடலாம். என்ன சொல்றீங்க....