Thursday, 24 April 2008

ஈரானில் சிறிலங்காப் படையினருக்கு புலனாய்வுப் பயிற்சி

ஈரானில் சிறிலங்காப் படையினருக்கு புலனாய்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சிறிலங்காப் படையினருக்கு ஆயுதத் தளபாடங்களை வழங்கி வரும் ஈரான் அண்மைக்காலமாக சிறிலங்காவுடனான இராணுவ ரீதியான உறவை பலப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்த பத்துப் பேரடங்கிய குழுவினருக்கு தற்போது ஈரானில் புலனாய்வுப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் இத்தகைய பயிற்சிகள் தொடரும் என்றும் தெரியவருகிறது.

ஈரானிடம் புலனாய்வுப் பயிற்சி மற்றும் இராணுவத் தொடர்புகளை சிறிலங்கா பேணி வருவது குறித்து அதிருப்தி அடைந்துள்ள இஸ்ரேல், தனது அதிருப்தியை சிறிலங்காவிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments: