Monday, 7 April 2008

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின், முதலாவது கொலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மாகாண சபை தேர்தல் வன்முறையாக மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளரான முகமது தம்பி மஜீத் அஸ்ரப் என்ற ஜவ்பர் என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 5.30 அளவில் அஸ்ரப் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் தேர்தலில் போட்டியிடும் அமீன் என்பவருக்கும் அஸ்ரப்புக்கும் இடையில் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அமீனின் ஆதரவாளரான நசீர் என்பவரால் அஸ்ரப் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்து;ளளனர். அமீன் அமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட அஸ்ரப் நாளை தினம் வெளிநாடு செல்லவிருந்தார். அஸ்ரப்பின் கொலையை கண்டித்து கல்குடா, பள்ளிவாசல்கள் சம்மேளணத்தின் ஏற்பாட்டில் இன்று (07-04) நண்பகல் 12 மணிமுதல் கடையமைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

No comments: