ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படாலாம் என ஜனாதிபதி
செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோபுள்ளே வகித்த இந்தப் அமைச்சுப் பொறுப்புற்கு ஏற்கனவே விருப்பமாய் இருந்த பசில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையைப் பயன்படுத்தி அதனைத் தனதாக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அமைச்சர் ஜெயராஜ் நாடாளுமன்றில் வகித்த அரசாங்கத்தின் பிரதம கொரடாப் பதவி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவி, தேசிய அமைப்பாளர் பதவி என, யாவற்றிற்கும் தனது நம்பிக்கைக்கு உரிய சகோதரரான பசில் ராஜபக்ஸவையே நியமிக்க ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான, மற்றும் கப்பல்துறை, அவற்றின் அபிவிருத்தி துறைகளின் அமைச்சராக ஜனாதிபதியின் அண்ணன் சமில் ராஜபக்ஸ, பாதுகாப்புத்துறை செயலராக தம்பி கோட்டபாய ராஜபக்ஸ, தற்போது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களான நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, கட்சியின் பொருளாளர், நாடாளுமன்றின் பிரதம கொரடா என அனைத்துமே ராஜபக்ஸ குடும்ப மயமாவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Monday, 7 April 2008
அரசாங்கத்தின் அதி உயர் பொறுப்புக்களில் ஜனாதிபதியின் மற்றும் ஒரு சகோதரர் நியமிக்கப்படவுள்ளார்?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment