மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்து 200 முறைப்பாடுகள், கிடைத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இதில் 40 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் அடங்குவதாக குறிப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்ய சென்றவர்கள் திட்டி விரட்டபட்;டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17-04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிரியெல்ல குறிப்பிட்டார். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டம் மதிக்கதக்க வகையில் உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கிழக்கு மாகாண சபை தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளில் இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்துதெரிவிக்க செல்லும் போது, கிழக்கு மாகாண சபை தேர்தலை நியாயமான முறையில் நடத்துமாறும், பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையுமாறும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது என கிரியெல்ல சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கம் 27 உட்னபடிக்கைகயில் கையெழுத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கைகளை மீறாதவகையில் செயற்படுமாறு அந்த அமைப்புகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளன. அரசாங்கம் இதனை கவனத்தில் கொள்ளாது செயற்படுமானால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதுடன் பொருளாதார தடையையும் எதிர்நோக்க வேண்டியேற்படும் என லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். கிழக்கில் ஆயுதம் தாங்கியுள்ள பிள்ளையான் அணியுடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் பிள்ளையான் குழுவினர் மேற்கொள்ளும் தவறுகளை அரசாங்கம் கண்டும் காணாதவாறு உள்ளதுடன் அவற்றை அனுமதிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவி;க்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்;. ஆயுத பயிற்சிக்காக சிறுவர்களை கடத்திச் செல்லல், ஆட்கடத்தல்கள், கப்பம் பெறல் போன்ற குற்றச்சாட்டுகள் பிள்ளையான் குழுவினர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஆயுதம் தாங்கியவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்துள்ளார்.
Thursday, 17 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
?????????????????
:(((((((
Post a Comment