Thursday, 17 April 2008

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை – விமல் வீரவன்ச

அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் தாம் கட்சிக்குள் முன்னெடுத்த கொள்கைப் பேராட்டத்தை கேவலப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் அனுராதபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்தவினால் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலடியாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விமல் வீரவன்ச ஜனாதிபதியுடன் சேர்ந்த ஏதாவது ஒரு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வார் என லால்காந்த அண்மையில் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படலாம் என லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும் யுத்தத்திற்கு ஆதரவான குழுக்கள் மற்றும் நபர்களை தம்முடன் இணைத்துக் கொண்டு செயலாற்ற விமல் வீரவன்ச முயற்சிப்பதாகத் தெரியவருகிறது.

No comments: