Sunday, 6 April 2008

மக்கள் தொலைக்காட்சிக்கு விருது

பெண் குழந்தைகளை நேசிக்க ஊக்கப்படுத்தும் சிறந்த ஊடக முயற்சிகளுக்கு ஐ.நா.மக்கள் தொகை நிதியமைப்பு (யூ.என்.எஃப்.பி.ஏ.) சார்பில் ‘லாட்லி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2007-ம் ஆண்டில் ‘மண்ணைக் காக்க பெண்ணைக் காப்போம்’ என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சுமார் 3650 தடவை ஒளிபரப்பப்பட்டது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மக்களுக்குத் தேவையான, அவர்களை நல்வழிப்படுத்துகிற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம்.

* புகைப்பழக்கம்.
* குடிப்பழக்கம்,
* வரதட்சிணை
* போன்ற தீய வழக்கங்களுக்கு எதிரான மற்றும்
* தூய்மைக்கு ஆதரவான

சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, எங்கள் பணி மேலும் சிறக்க உதவும் என மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தன

நன்றி: தினமணி

No comments: