Monday, 14 April 2008

"ஈழம் இதுவரை கண்டிராத பிரமாண்டமான புதிய யுத்தமுனை ஒன்றை திறக்கப்போகின்றோம்"- சிறி லங்கா படைத்தளபதி

ஈழப்போர் இதுவரை கண்டிராத உக்கிர யுத்தமுனை ஒன்றை வட போரரங்கில் காணப்போகின்றதாம். இத்தகவலை கொழும்பு பத்திரிகையொன்றில் சிறிலங்கா படைத்தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகள் பேச்சு மூலமான தீர்விற்கு வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி மகந்தாவும் பிரதமர் விக்கிரமநாயக்கவும் முன்னரைவிட உறுதியாக போரை முன்னெடுப்போம் என சூளுரைத்துள்ளனர்.

தற்போது மன்னார், மணலாறு முனைகளில் படிப்படியான முன்னேற்றத்துடன் எதிரகளை அழித்து வரும் தமது படைகள் யாழ் முன்னரங்கில் ஈழப்போர் இதுவைரை சந்திக்காத படையெடுப்பு ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக சூளுரைத்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தளபதி.

இப்போர் முனை மன்னார், மணலாறு யுத்தமுனைகளைப்போல் படிப்படியானதாக இல்லாமல் பாரிய, சடுதியான பிரமாண்டதானதாக இருக்குமாம்.

யாழ் முனையில் சில மாதங்களுக்கு முன்னரே தாக்குவதாக இருந்தனராம். ஆனால் புலிகள் அதை எதிர் பார்த்து இருந்ததால், தாம் மன்னார், மணலாறு களமுனைகளில் புலிகளைச்சண்டைக்கு இழுத்து அழித்து வருகின்றனராம்.

இப்போது யாழ் முனையைத்திறப்பதற்கான காலம் வந்துவிட்டதாம். சரியான நேரம் இன்னும் குறிக்கப்படவில்லையாம் ஆனால் யாழ் யுத்த முனை திறப்பது உறுதியாம். தனியாக ஒரு முனையில் மட்டுமல்லாமல் கிளாலி முதல் நாகர் கோவில் வரை பரந்து தாக்கப்படுமாம். புலிகளால் மூன்று முனைகளிலும் தாக்கு பிடிக்க முடியாமல் திணறுவார்களாம். இவ்வாறு திட்டம் போடுகிறார் சரத் பொன்சேகாவும் அவரது தளபதிகளும்.

மேலும் இராணுவத்தினருடனான செவ்வியில் வந்த சில தபவல்கள இங்கே தருகின்றோம்.

2006 அக்டேபர் பிழையான நேரத்தில் ஆனையிறவு நோக்கி ஆரப்பிக்கப்பட்ட முயற்சி படு தோல்வியில் முடிந்ததை ஒப்புக்கொண்டுள்ள தளபதி, ஏன் முன்னர் பிழையான நேரம் தற்போது சரியான நேரம் என வெளிப்படையாக கூறவில்லை. இருந்மாலும் மன்னார், மணலாறு களங்களால் புலிகள் பலவீனமடைந்துள்ளதாக எண்ணுகிறார் போலும்.

அத்துடன் 2006 இல் புலிகள் மாவிலாற்றில் சாடடிற்கு பாக்கிக் கொண்டு யாழில் திடிரென தாக்குதல் தொடுத்ததால் ஆரமபத்தில் சிறிது பின்வாங்க வேண்டி வந்ததாம். ஆனால் பின்னர் மேலதிகமாக 400 மீட்டர் தூரம் வரை கைப்பற்றி யுள்ளனராம். இவ்வாறு இராணுவத்தின் யாழ்- கட்டளைத்தளபதி மேஜர். ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி கூறியுள்ளார்.

55, 53 படையணி சிலகாலமாக சிறு சிறு தாக்கதல்கள் மூலம் எதிரியின் பகுதிகளில் தினமும் இழப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனராம். இப்படைப்பிரிவுகளும் இயந்திர படைப்பிரிவும் யாழ் யுத்தமுனையைத்திறக்க பயன்படுத்தப்படுவராம்.

யாழ் குடாநாடு எப்பவும் தமது முதல் கரிசனைக்குட்பட்டு பிரதேசம். தாக்குதல் டிவிசன்கள் 55, 53 ஐத்தவிர 51 ஆவது டிவிசன் வலிகாமத்தலும், 53 ஆவது டிவிசன் வறனியிலுமாக 33 000 படையினரும் காவல் துறை , ஆகாயப்படை, கடல் படை யென 8000 படையினரினதும் கட்டுப்பாட்டில் யாழ் குடா உள்ளதாம்.

மேலும் இயந்திர படையணி துரித வேகத்தில் ஆனையிறவை அடைய முடியுமாம். இவ்வாறு பல திட்டங்கள் இராணுவத்தினரால் போடப்பட்டது.

ஆனாலும் மன்னார் களமுனை திறக்கப்படுவதற்கு முன்னரும் இவ்வாறான செய்தி ஒன்று வந்தது. எனவே இச்செய்தியை வெறும் பிரச்சார யுக்தி என புறந்தள்ள முடியாது. தமிழ் மக்கள் தற்போது சந்தித்து வரும் சண்டையைவிட கொடிய பாரிய சண்டை ஒன்றை எதிர் கொள்ள வேண்டியுள்ளனர்.

தமிழரைப் பொறுத்த வரையில் அச்சண்டையில் வென்றால்தான் விடிவு இல்லையேல் அடிமை வாழ்வு அடுத்த சந்ததிக்கும் தொடரும்.

இந்த சண்டையில் வெல்வதும் தோற்பதும் யார் கையில் உள்ளது ?

5 comments:

ttpian said...

if sla open a BIG WAR FIELD,my brothers will teach them a lesson or two!
Let Fonseka ensure,whether he will be alive or not?
NALLATHAMBI

Anonymous said...

I am so sorry for our Tamils, Still living in a dreamworld

Anonymous said...

Gen. Fonseka will learn a lesson or two from Theepan anna in Nothern front.

தமிழன் said...

சிங்கள வெறியர்களை வெல்லும் ஆற்றலை அந்த இறைவன் நமக்கு கொடுக்கட்டும். தருமம் ஒரு நாள் வெல்லும்.

Anonymous said...

பொன்சேகா தானே ஒரு வருடத்துக்கு முன் வன்னியை பிடிப்பதாக சொன்னவர். பிடித்து விட்டாரா? இப்போ சொல்வதை எப்படி நம்புவது?