bigadda.Com உடன் இணைந்து இந்த பிளாக்கை உருவாக்கியுள்ளார் அமிதாப் பச்சன். இதுகுறித்து அமிதாப் கூறுகையில், bigb.Bigadda.Com என்பதுதான் எனது பிளாக்கின் பெயர்.
இந்த பிளாக்கின் மூலம், எனது கருத்துக்கள், உணர்வுகள், சிந்தனைகள் உள்ளிட்டவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும். எனது மனதின் பிரதிபலிப்பாக இந்த பிளாக் செயல்படும். எனது உண்மையான முகத்தை இந்த பிளாக்கில் அனைவரும் காண முடியும்.
என்னைப் பற்றி மீடியாக்கள் மூலம் பார்ப்பதை விட, அறிவதை விட என்னை நானே மற்றவர்களுக்கு நேரடியாக தெரிவித்துக் கொள்ள இந்த பிளாக் நல்ல ஊடகம்.
நான் சொல்ல நினைப்பதை அப்படியே சொல்ல முடியும். எனது கருத்துக்களை யாரும் எடிட் செய்ய முடியாது, பொய் சேர்க்க முடியாது, கற்பனையை சேர்த்து விட முடியாது. நான் நானாக இந்த பிளாக்கில் அறியப்படுவேன்.
என்னைப் பற்றிய வதந்திகளுக்கு, பொய்ச் செய்திகளுக்கு இந்த பிளாக் மூலம் நானே நேரடியாக விளக்கம் தர முடியும். அதுகுறித்து என்னிடமே நேரடியாக ரசிகர்கள் கேட்கலாம்.
மொத்தத்தில் அமிதாப்பச்சனை, அப்படியே அறிந்து கொள்ள, உண்மையான தகவல்களைப் பெற இந்த பிளாக் உதவும் என்றார் அமிதாப் பச்ன்.
அமிதாப் பச்சனின் பிளாக் முகவரி இதுதான் - http://bigb.Bigadda.Com
ஏற்கனவே அமீர்கான் ஒரு பிளாக் வைத்துள்ளார். இயக்குநர் குனால் கோலியும் ஒரு பிளாக் வைத்துள்ளார். இன்னும் சில பாலிவுட் பிரபலங்களும் பிளாக் வலையில் இணைந்துள்ளனர். இப்போது பிக் பியும் இணைகிறார்.

No comments:
Post a Comment