Monday, 21 April 2008

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மல்வத்துபீட மநாயக்க தேரர் விமல் தரப்புக்கு ஆலோசனை--டெய்லி மிறர்

கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட முடியாத நிலை காணப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மல்வத்து மநாயக்க தேரர் விமல் விரவன்சவிடம் கோரியுள்ளார்.

கண்டி மல்வத்து மநாயக்க தேரரை நேற்றைய தினம் விமல் வீரவன்ச தரப்பினர் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டவேளை மநாயக்க தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் படையினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் இன்றியமையாததென மல்வத்து மாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார் என டெய்லி மிறர் தெரிவித்துள்ளது.

முப்படையினரை ஊக்குவிக்க விமல் வீரவன்ச கடந்த காலங்களில் அளப்பரிய சேவையாற்றியுள்ளதாகவும் தொடர்ந்தும் அவரது சேவை நாட்டுக்குத் தேவை எனவும் நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சியை சரியான வழிக்கு இட்டுச் செல்ல இன்னமும் அவகாசம் இருப்பதாக தாம் கருதுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் நாட்டின் நலன் கருதியே எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்வோம் என விமல் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளனர்.

2 comments:

Anonymous said...

Bold head facist adviced to
sinhala racist Vimal veera vansa
to join in the Butcher's gov and
support killing the killing fields in Sri Lanka

Anonymous said...

Very sad to see that the buddhists monks who claim follow the footsteps of Buddha, still think that Tamil problem is a terrorist problem. It is not that they do not see that truth but they do want to accept that they see the truth. Unless the buddhist monks open the eyes wide open the country will go towards famine as it is now. They still try to seek a place for Buddha but there is no place for an ordinary person to live in the country.