சர்வதேச அளவில் முதல் 100 அவுட்சோர்சிங் நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவின் இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட 20 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில், '2008 சர்வதேச அவுட் சோர்சிங் 100' என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சர்வதேச அளவில் தலை சிறந்த 100 அவுட் சோர்சிங் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் 20 நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவை. இவற்றில் இன்போசிஸ் மூன்றாவது இடத்தையும், டிசிஎஸ் ஆறாவது இடத் தையும், ஜென்பாக்ட் ஒன்பதாவது இடத்தையும் டெக் மகிந்திரா 10வது இடத்தையும் பெற்றுள்ளன.
சர்வதேச அளவில் தலைசிறந்த 10 அவுட்சோர்சிங் நிறுவனங்கள் பட்டியலில், நான்கு இடங்களை இந்திய நிறுவனங்கள் பிடித்துள்ளன. இதன் மூலம், அவுட் சோர்சிங் துறையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தை பிடித்துள்ள இன்போசிஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 60 கோடிக்கு அதிமாக லாபம் ஈட்டி வருவதாக கருதப்படுகிறது.
பட்டியலின் முதலிடத்தை அக்செஞ்சுர் நிறுவனம் பிடித்து, ஐபிஎம் நிறுவனத்தை இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளது. முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற இந்திய நிறுவனங்கள் வருமாறு: எச்.சி.எல்., டெக்னாலஜி (11), மாஸ்டெக் (16), டபிள்யு.என்.எஸ்., குளோபல் சர்வீசஸ் (19), ஹெக்சாவேர் (22), எக்ஸ்எல் சர்வீசஸ் (26), 24/7 கஸ்டமர் (28), கேம்பிரிட்ஜ் (36), ஐ.டி.சி., இன்போடெக் (40), கே.பி.ஐ.டி., கம்மின்ஸ் (56), பாட்னி (46), ஜென்சர்சிஸ் (53),மைண்ட் டிரீ (54), மிபாசிஸ் (56), ஆதித்யா பிர்லா மினாக்ஸ் (62), பஸ்ட்சோர்ஸ் சொலூசன்ஸ் (73), வி கஸ்டமர் (84).
Monday, 5 May 2008
டாப் 10 அவுட் சோர்சிங் நிறுவனங்கள்: 4 இடங்களை பிடித்து இந்தியா சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
If you give the links. It will be more useful for us.
thanks for your information
KPIT Cummins is at 42..pls make the corretion.
who is this out sour,SINGH? Is he the relative of Harbhajan Singh?
Post a Comment