மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
(2 ஆம் இணைப்பு: கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரம், மேலதிக படங்கள்)
சிறிலங்காப் படையினர் கறுக்காய்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் பெருமெடுப்பிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.
ஆட்டிலெறிகள்-மோட்டார்கள்-பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் மிகச்செறிவான சூட்டாதரவுடனும் டாங்கிகள், கவச ஊர்திகளின் பீரங்கிச் சூட்டாதரவுடனும் படையினர் இம் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர்.
கைப்பற்றப்பட்ட படையினரின் உடலங்கள்
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி
படையினருக்கு ஆதரவாக வான் படையினரின் கிபீர் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 8:00 மணிவரை மிகச்செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு நேரடி முறியடிப்புத்தாக்குதலை சிங்களப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்தினர்.
இம் முறியடிப்புத் தாக்குதலையடுத்து காலை 8:00 மணியளவில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி
இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவு படையினர் காயமடைந்தனர்.
இம் முறியடிப்புத்தாக்குதலில்
படையினரின் உடலங்கள் - 05
பிகே எல்எம்ஜி - 02
ஏகே எல்எம்ஜி - 03
ரி-56 2 ரக துப்பாக்கி - 04
ஏகே மகசின் - 21
ஏகே ரவை - 340
எல்எம்ஜி லிங்குடன் ரவை - 265
பிகே ரவை - 20
பிகே லிங்கு - 34
கிற் பாக் (ஜக்கட்) - 14
தலைக்கவசம் - 04
ரவை துளைக்காத ஜக்கட் - 03
ஏகே எல்எம்ஜி றம் - 02
50 கலிபர் ரவைப் பெட்டி - 02
பிகே பெட்டி - 02
கைக்குண்டு - 01
தண்ணீர் கொள்கலன் - 20
இராணுவச் சப்பாத்து - 05
மற்றும் பெருமளவிலான படைக்கலங்கள், வெடிபொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
படையினரின் படைக்காவி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வண்ணம் பின்னோக்கி படையினரால் இழுத்துச் செல்லப்பட்டது.
No comments:
Post a Comment