Friday, 9 May 2008

தமிழக மீனவர் படகு மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் ,செல்வம் என்ற மீனவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து தமது முகாமுக்கு கொண்டுசென்றுள்ளது

தமிழக மீனவர் படகு மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுகுடியில் வசிக்கும் 30வயதான செல்வம், புதுகோட்டை மணல்மோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான செல்வராஜ் ஆகியோர் கடந்த 5 ஆம் திகதி பைபர் படகின் மூலம் கடறொழில் ஈடுபட சென்றுள்ளனர்.

இவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அந்த பகுதிக்கு சென்ற இலங்கை கடற்படையினர் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் இருவரும் கடலில் குதித்துள்ளனர். இந்த நிலையில் கடலில் தத்தளித்த செல்வம் என்ற மீனவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து தமது முகாமுக்கு அழைத்துச் சென்றதாக தப்பி சென்ற மீனவர் செல்வராஜ் கூறியுள்ளார்.

டீசல் கேனை பிடித்து நீந்தி சென்ற செல்வராஜாவை பாம்பன் பிரதேச மீனவர்கள் கடந்த 6ஆம் திகதி காப்பற்றி கரைசேர்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி இரவு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அதிக வெளிச்சத்துடன் அங்கு சென்ற இலங்கை கடற்படையினரின் கப்பல் தம்மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் இதனையடுத்து தாம் உயிரை காப்பற்றிக் கொள்ள கடலில் குதித்ததாகவும் கரைசேர்ந்த மீனவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செல்வராஜ் தொண்டி காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாவும் தொண்டி காவல்துறையினர் இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
thank you:உலகத் தமிழ்ச் செய்திகள்


1 comment:

ttpian said...

this is regular one:even if srilankan navy kill our tamilnadu fishermen,Indian Govt will not notice it!
Tamilnadu politicians are now wearing "National"brand underwear