Sunday, 11 May 2008

வன்னி படையெடுப்பை நிறுத்த 27 அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சி -- திவயின

வன்னி மீதான படையினரின் படையெடுப்பு நடவடிக்கை களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், 27 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறப்படுவதற்கு அந்நாட்டு அர சாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறி, மேற்படி இயக் கங்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.

கடந்த 6ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி கடி தத்தில், சர்வதேச மனித உரிமைச் சங்கத்தில் இலங்கையை இணைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெ?விக்கப்பட்டுள் ளது.

இவ்வாறு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் விடுதலைப் புலிகளுக்கு சார்பான இயக்கங்களில் சில இதுவரை யில் இனங்காணப்படாதவை என தெரியவந்துள்ளது.

இவற்றில் ஆர்டிக்கல் 19 மற்றும் ரிப்போட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் எனும் சர்வதேச ஊடகவியலாளர்களின் இரு இயக்கங் களும் உள்ளடங்குவதாக தெ?விக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்கங்களின் முக்கியஸ்தர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

இம்முக்கியஸ்தர்களின் பிரதான நோக்கம் தமிழ் மக்களின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதன் முலம் படையினரால்
முன்னெடுக்கப்பட்டு வரும் வன்னி படை யெடுப்புக்களை தடுத்து நிறுத்துவதே ஆகும்.

(11.05.2008 திவயின பாதுகாப்பு விமர்சனம்)

No comments: