Thursday, 8 May 2008

'அக்னி-3'க்கு போட்டியாக 'ஹதஃப்-8' ஏவுகணையை பாக். சோதனை

Hatf
இஸ்லாமாபாத்: அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய அக்னி-3 ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்த மறுநாளே அதற்கு போட்டியாக பாகிஸ்தான் 'ஹதப்-8' ஏவுகணையை செலுத்தி சோதனை செய்துள்ளது.

அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய அக்னி-3 ரக ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து இந்த ஏவுகணையை ராணுவத்தில் பயன்படுத்துவதற்கு தயார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையி்ல் பாகிஸ்தான் அரசு தனது பராக்கிரமத்தை வெளிக்காட்டிக் கொள்ளும் வகையில் ஹதஃப்-8 ரக ஏவுகணையை இன்று சோதனை செய்தது.

ஹதஃப்-8 ஏவுகணை அணு ஆயுதம் உள்பட எல்லாவகை ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக்கூடியது. விமானத்தில் செலுத்தக்கூடிய இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரத்துக்கு பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் க்ரூஸ் வகை ஏவுகணையாகும்.

No comments: