சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடையே பெரும் நிதியைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. லண்டனில் உள்ள சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்தில் இதற்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டதை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் வாழும் சிங்கள மக்கள் மற்றும் வணிகர்கள் இணைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஒரு இலட்சம் பவுண்ஸ் நிதி முதற்கட்டமாக சேகரிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட இந்த நிதியை சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிதி சிறீலங்காப் தரைப்படையினர், கடற்படையினர் மற்றும் வான்படையினரின் வீடமைப்புத் திட்டத்திற்கு பயனபடும் எனக் கூறியே நிதிகேரிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அநுராதபுரத்தில் உள்ள இப்போலோகம என்ற இடத்தில் சிறீலங்காப் படையினருக்கான 1620 வீடுகள் கட்டிமுடிக்கும் நிலையில் உள்ளது என பிரிகேடியர் பிரசாத் சமரங்க தெரிவித்துள்ளார்.
மொத்தம் 50 ஆயிரம் வீடுகள் கட்டத்தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும், சிறீலங்கா மத்திய வங்கியும் இணைந்தே முன்னேடுக்கின்றன.
இந்த நிகழ்வை பிரித்தானியாவுக்கான சிறீலங்கா உயர் ஸ்தானிகர் சேனுகா செனவிரத்தின ஆரம்பித்து வைத்தார். இந்த நிதிசேகரிப்பு சிங்கள் மக்கள் வாழும் ஏனைய நாடுளிலும் சேகரிக்கப்படவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது
Thursday, 8 May 2008
சிறீலங்காப் படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment