Monday, 19 May 2008

அதிர்சித் தாக்குதல் நடத்த 300 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொழும்பில் பதிங்கியுள்ளனர்

பல்வேறு தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 300 உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியிருப்பதாக தொம்கொட இராணுவ பயற்சி முகாமின் உயர் அதிகாரி லெப் கேர்ணல் ஹிமால் லசந்த குருகே தெரவித்துள்ளார்.

ஹொரணை பிரதேச பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காலை வேளையில் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் தகவல்களை சேகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி ஹொரணை பிரதேச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரணை காவற்துறை தலைமையகப் பொறுப்பதிகாரி ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

No comments: