Thursday, 1 May 2008

தெஹிவளையில் மூன்று தமிழ் இளைஞர்கள்,கண்டி 4 தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

தெஹிவளையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும், காவல்துறையினர் இணைந்து பிரதேசத்தில் இன்று காலை 6 மணி முதல் முற்பகல் 9.30 வiர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, பருத்தித்துறை, ஊர்காவற்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 முதல் 24 வயதிற்கிடையிலான இளைஞர்கள் என கல்கிஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் தமது உயர்கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு பிரதேசத்தில்; தங்கியிருந்ததாக தெரிவித்த போதிலும், அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை என தெஹிவளை காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கண்டி தவுலகல காவல்துறை பிரதேசத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது 4 தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments: