கதிர்காமம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த பெண் உப பெலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு இராணுவப் படைவீரர் உள்ளிட்ட 5 பேர் இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரியவருகிறது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் தகாத முறையில் நடந்து கொள்ள இராணுவப்படைவீரர் உள்ளிட்ட நபர்கள் முற்பட்டதாகத் தெரியவருகிறது.
கதிர்காமம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்கம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இவ்வாறு தகாத முறையில் நடக்க முயற்சித்தவர்களில் இராணுவ சிப்பாய் ஒருவர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ள போதிலும் அவர் தற்போது பணியாற்றுகிறாரா அல்லது பணியிலிருந்து விலகியவரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நீல் தலுவத்த எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment