Friday, 2 May 2008

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு --பிள்ளயான் டீ.வி

வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ற பெயரில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு உதயம் தொலைக்காட்சி அலைவரிசை நேற்று (மே 01) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. ”அறிவு, ரசனை மற்றும் அரசியல் கலந்துரையாடல்கள், கலை, கலாசார, சமய நிகழ்ச்சிகள் எனப் பல்கலை அம்சங்களையும் உள்ளடக்கி வடக்கு, கிழக்கு மக்களுக்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு இணையாக இத்தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது” என அத்தொலைக்காட்சி தெரிவிக்கிறது.


இத்தொலைக்காட்சி தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது ”நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாதுகாப்பு, அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அரசின் எதிர்காலத்திட்டங்கள், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பெற்றுக்கொண்ட பொருளாதார, அரசியல், சமூக சுதந்திரம் தொடர்பாகவும் அந்த மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்குடன் உதயம் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.??????????


கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த மற்றும் முன்னெடுக்கவிருக்கும் விசேட வேலைத்திட்டங்களை எமது நாட்டு மக்கள் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் மக்களும் அறிந்துகொள்ளக்கூடிய விதத்தில் உதயம் தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக ஒளிபரப்பப்படவுள்ளது.” என அதில் தெரிவிக்கப்பட்டது.?????????

அரசு கூறி வரும் கிழக்கின் உதயம் - உதயம் ரிவியா? என்ற சந்தேகம் ஏற்படுவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாததே. தொலைக் காட்சி போன்ற ஊடகங்களினூடாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மறைத்து அவர்களை தங்கள் பிரச்சாரபலத்தினால் மாயைக்குள் அமுக்கி அவர்களது

போராட்ட குணாம்சத்தை மழுங்கடிக்கும் சதனாமாக இது அமையப் போகிறதா என்ற அச்சம் எழுகிறது.

No comments: