இந்தியர்களும் சீனர்களும் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மக்கள் தொகையின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததாலேயே உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உலகில் அதிக உணவுப் பொருள்களை பயன்படுத்துபவர்கள் அமெரிக்கர்கள் தான் என்றார் ராஜா.
உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு இந்தியா மற்றும் சீன மக்கள் அதிகமாகச் சாப்பிடுவதே காரணம். இதனால் இந்த இரு நாடுகளும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது. இதுவே உலக அளவில் உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு காரணம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கருத்துக் கூறியிருந்தார்.
Friday, 2 May 2008
இந்தியர்கள் குறித்த காண்டலீசாவின் பேச்சுக்கு டி. ராஜா கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment