பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 5,000 பேர் இறந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் பல ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள நகரங்களிலும் காணப்பட்டது.சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது சிசூவான் மாகாணம். இதன் தலைநகரான செங்டூவில் இருந்து 146 கி.மீ., தொலைவில் உள்ளது வெங்சூவான் பகுதி. இந்திய நேரப்படி காலை 11.58 மணிக்கு , இப்பகுதியில், மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம்: ஆனால், சிசூவான் மாகாணத்தை ஒட்டி உள்ள, சோங்குயிங் பகுதியில் உள்ள இரண்டு ஆரம்ப பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பள்ளியில் இருந்த 900 மாணவர்கள் இடிபாடுகளில் புதைந்து விட்டனர். இதுவரை 107 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இறந்தவர்கள் எண்ணிக்கை, 5,000த்தை தாண்டியுள்ளது. இது தவிர, பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.மீட்பு பணியில், ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி, சீன அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. பிரதமர் வெங் ஜியாபாவோ, பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இது தவிர, ஹெலிகாப்டர்களும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.சிசூவான் மாகாணத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்படுவது இதுவே முதல் முறை. இந்த பகுதி, திபெத் கண்ட திட்டை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று பிற்பகல், சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்ட பிறகு, அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட சிறு அளவிலான, நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால், சீனாவில் பெரும் பதட்டம் காணப்பட்டது.
No comments:
Post a Comment