சுவிற்சர்லாந்து மேலும் அதிகமான அகதிகளை ஏற்றுகொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நலன்பேணும் ஆணையாளர் திரு. அந்தோனியோ குற்றெரெஸ் (Antonio Guterres) கோரிக்கை விடுத்துள்ளார்.
சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் விட்மர் ஸ்லும்பிற்கும் ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் நலன்பேணும் ஆணையாளருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இக்கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. இச்சந்திப்பின்போது சுவிற்சர்லாந்தில் வாழும் அகதிகள் தொடர்பாகவும், ஏனைய நாடுகளில் வாழும் அகதிகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டது.
இதன் போது ஏனைய நாடுகளில் அகதிகள் விடயத்தில் பின்பற்றும் நடைமுறையை நீங்களும் பின்பற்ற வேண்டும் என்று ஐ.நா அகதிகள் ஆணையாளர் திருமதி எவலின் விட்மரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் ஏற்கனவே சுவிஸ் மக்கள் கட்சியினரால் கொண்டுவரப்பட்டு, புதிய சட்டமாக்கபட்ட குற்றவாளிகளை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்புவது என்ற சட்டத்தின் எதிர்மறையான விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கபட்டது.
ஏற்கனவே சுவிற்சர்லாந்தில் அமுலில் உள்ள சட்டமான உயிர்பாதுகாப்பு இல்லாவிட்டால் அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்ற சட்டத்தை இப்புதிய சட்டம் எவ்வகையிலும் பாதிக்கபடக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அந்தோனியோ குற்றெரெஸ் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த திருமதி விட்மர் ஸ்லும்ப் தமது நாட்டில் உயிர்பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு சுவிற்சர்லாந்து என்றும் தஞ்சம் வழங்கும் என்றும் தவறான தகவல்களை வழங்கி இச்சலுகையை துஷ்பிரயோகம் செய்ய முயல்பவர்களை தாம் இனங்காண முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Monday, 12 May 2008
சுவிற்சர்லாந்து மேலும் அகதிகளை ஏற்றுகொள்ள வேண்டும் – ஐ. நா அகதிகள் ஆணையாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment