ஜே.வி.பி.யின் 5ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருந்த கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க திடீரென தமிழில் பேசத் தொடங்கினார்.
இதன்போது சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுடன் நட்புறவுடன் பழக வேண்டும். இதன்?லமே இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனக் கூறினார்.
5ஆவது தேசிய மாநாடு நடந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடத்தில் தமிழ் மொழியில் ஒருசில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டே சோமவங்ச அமரசிங்க தமிழ் மொழியில் பேசத்தொடங்கினார்.
அவர் தொடர்ந்தும் தமிழில் பேசுகையில் கூறியதாவது:
அன்பார்ந்த தோழர்களே இனவாதம் இல்லாத ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
ஏனெனில் நாம் அனைவரும் இலங்கையர்கள். தேசிய ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு ஜே.வி.பி. தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
நாட்டில் உருப்பெற்றுள்ள இனப்பிரச்சினைக்கு மூலகாரணமே மொழிப் பிரச்சினைதான். ஆகவே, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்த வேண்டும்.
தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டியது இன்றைய அதி?க்கிய தேவையாகவுள்ளது. இதனை ஜே.வி.பி.மட்டுமே வலியுறுத்தி வருகின்றது.
இந்நாட்டில் உருவெடுத்துவரும் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமானால் இனவாதிகளின் செயற்பாடுகளை தோற்கடிக்க வேண்டும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் நட்புறவுடன் பழக வேண்டும்.
அப்படியானால் மட்டுமே இந்த நாட்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இனவாதத்திற்கு முடிவு கட்ட முடியும்.
Tuesday, 27 May 2008
ஜே.வி.பி.யின் 5ஆவது தேசிய மாநாட்டில் தமிழிலும் பேசிய சோமவங்ச அமரசிங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment