பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய சுந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் புதிய அரசாங்கத்தை ஜே.வீ.பீயின் தலைமையில் கட்டியெழுப்ப போவதாக ஜே.வீ.பீயின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வீ.பீயின் 5வது தேசிய மாநாடு நேற்று (மே27) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றதுடன் அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 43 வருட ஜே.வீ.பீயின் வரலாற்றில் பல்வேறு அடக்குமுறைகள், சந்தர்ப்பவாதிகளை தோற்கடித்து ஜே.வீ.பீ வெற்றியடைந்துள்ளது.
இலங்கை மண்ணுக்கு சுதந்திரத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த பயணத்திற்கான தடையாக உள்ள சந்தர்ப்பவாத்தை தோற்கடிப்பது, தமக்குள்ள சவால்கள் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை கொண்டு அந்த சவால்களை வெற்றிகொள்ள போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போலியான தேசப்பற்றாளர்கள், எந்த தர்க்கங்களை கூறி கொண்டு, மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தை பாதுகாக்க சென்றிருந்தாலும், தற்போதைய அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்க சென்ற பாதையிலேயே பயணித்து சென்று கொண்டிருக்கிறது.
மகிந்த ராஜபக்ஸவினால் கைவிடப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பை நிறைவேற்ற விரிவான மக்கள் சக்தி ஒன்றை கட்டியெழுப்ப போவதாகவும் ஜே.வீ.பீயின் பிரதான செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேசத்துரோக பயணத்தை மேற்கொண்டுள்ள தற்போதைய அரசாங்கத்துடன் எந்த தேசப்பற்றாளனுக்கும் தொடர்பில்லை என்ற போதிலும், மகிந்த அரசாங்கம் தேசதுரோக பயணத்தை மேற்கொள்ளவில்லை என கூறுபவர்கள் வாழ வேறு வழியில்லாது, அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் சந்தர்ப்பவாதிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி தனது ஏகாதிபத்திய நிகழச்சி நிரலை நிறுத்திய இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க எண்ணியுள்ளது.
அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் ரிலவின் சில்வா குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியமைக்க இடமளிக்க போவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Tuesday, 27 May 2008
தேசிய சுந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் புதிய அரசாங்கம் கட்டி எழுப்பப்படும்: ரில்வின் சில்வா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment