கொழும்பு நகரின் கதிரேசன் வீதியில் நேற்று (மே27) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரவு 8.30 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனம்தெரியாத நபர்களால் சுடப்பட்டவர் பாலாஜி லொட்ஜ் உரிமையாளரான 56 வயதுடைய எஸ் முத்தையாபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது வியாபார நிலையத்தின் முன்பாக நின்றுகொண்டிருந்த இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய வேளை 100 மீற்றருக்குட்பட்ட பகுதியில் காவற்துறை மற்றும் படையினர் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு பெற்றாவில் வீரமைலன் மண்டப உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment