Tuesday, 27 May 2008

இங்கிலாந்து மற்றும் ஸ்கெண்டிநேவிய நாடுகளுக்கு ஆட்களை சட்ட விரோதமாக கொண்டு செல்லும் நடவடிக்கையை நீண்டகாலம் மேற்கொண்டு வந்த இலங்கையர்கள் மூவர் கைது

இங்கிலாந்து மற்றும் ஸ்கெண்டிநேவிய நாடுகளுக்கு ஆட்களை சட்ட விரோதமாக கொண்டு செல்லும் நடவடிக்கையை நீண்டகாலம் மேற்கொண்டு வந்த இலங்கையர்கள் மூவரை ஜேர்மனியில் வைத்து அந்நாட்டு பொலீசார் கைது செய்துள்ளனர்

ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையங்கள் ஊடாக ஆட்களை சட்ட விரோதமாக கொண்டு செல்லும் இந்த மூன்று இலங்கையர்களும் தற்போது ஜேர்மன் நாட்டில் பிரஜா உரிமையை பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலீசாரை மேற்கோள் காட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்டர்டேம், டொட்மன், குளோன் மற்றும் பொன் ஆகிய முக்கிய விமான நிலையங்கள் ஊடாக இவர்கள் பல வருடங்களாக நு}ற்றுக்கணக்கான இலங்கையர்களை சட்டவிரோமாக இங்கிலாந்திற்கும் ஸ்கென்டிநேவிய நாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜேர்மன் பொலீசாhர் அண்மையில் மேற்கொண்ட தேடுதலின்போது வீடொன்றிலிரந்து எட்டு வயது இலங்கை சிறுவன் ஒருவனை கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலீசார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்தே இந்த ஆட்கடத்தல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் என கருதப்படும் மூன்று இலங்கையர்களையும் ஜேர்மனிய பொலீசார் கைது செய்துள்ளதோடு மேலும் சிலரை தேடி வலைவிரித்துள்ளனர்.

இதேவேளை இக்கும்பல் தரைவழியாகவும் ஸ்கண்டினேவிய நாடுகளுக்கு ஆட்களைக் கொண்டு சென்றுள்ளதாகவும் இதற்கென இக்கும்பல் மினி பஸ்களை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments: