வடக்கு யுத்தகளத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது படையினர் தாக்குதல்களை மேற்கொண்டாலும் அவர்கள் நாடாளாவிய ரீதியில் தாக்குதல்களை நடத்தும் வல்லமையை கொண்டுள்ளார்கள் என இந்த மையத்தின் புலனாய்வு ஆய்வாளர் ஜோன் டிரெக் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டப்போவதாகவும் யார் சொன்னாலும் தாம் போரை நிறுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ள நிலையிலேயே ஜோன் டிரெக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழிழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை இலக்கு வைக்காமல் தம்மீது இலக்கு வைத்துப்பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு படையினரை அவமதிக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது. ஊடகங்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்துக்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். |
Tuesday, 27 May 2008
தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தப்போவதாக லண்டன் புலனாய்வு ஆய்வாளர் ஜோன் டிரெக்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment