வன்னிப் பிரதேசத்தைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக அரச படையினர் தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த வன்னி இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்காக சுவிற்சர்லாந்தின் தலைநர் ஜெனீவாவில் குறிப்பிட்ட சர்வதேசப் பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கெதிரான சதிமுயற்சி ஒன்றில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பில் செயற்படும் முன்னணி அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டாளராகிய பெண்மணி ஒருவரும் மற்றமொரு பிரதான ஆண் செயற்பாட்டாளரும் முக்கிய பங்கெடுத்துள்ளதாகவும் இவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து அண்மையில் ஜெனீவாவுக்குச் சென்று அங்கு அங்குள்ள டென்மார்க் நாட்டு தூதுவர் உட்பட குறிப்பிட்ட வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து இரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இவ்வாறு நடத்தப்பட்ட இரகசிய சதிமுயற்சிப் பேச்சுகளின் போது மே 21 ஆம் திகதி நடந்த சர்வதேச மனித உரிமைகள் சபைக்கான அஙகத்தவர் தெரிவு நிகழ்வில் அங்கத்துவம் கோரும் இலங்கையின் முயற்சியை முறியடிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஜெனீவாவிலிருந்து வெளியாகியுள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி இலங்கைக்கெதிரான இந்த இரகசியமான சதியாலோசனையில் தென்னாபிரிக்க மதகுரு டெஸ்மன்ட் ருட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஆர்ஜென்ரினா நாட்டவரும் நொபல் பரிசு பெற்றவருமான அடொல்பே பெறெஸ் ஆகியோர் ஒன்றுகூடி மனித உரிமைகள் சபையில் இலங்கையால் அங்கத்தவராக தேர்ந்தெடுக்க வேண்டாமென சபையின் 47 அங்கத்துவர்களையும் கோரும் அறிக்கையை வெளியிட்டனர். இதனாலேயே, இலங்கையால் சர்வதேச உரிமை சபையில் அங்கத்துவம் பெற முடியவில்லை. திவயின விமர்சனம்:25.05.2008
Wednesday, 28 May 2008
அரசுக்கு எதிராக சதி செய்ய கொழும்பிலிருந்து ஜெனீவா சென்ற அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment