அடையாள அட்டைகள் காணாமல் போன சந்தர்ப்பத்தில் மீண்டும் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போரிடம் 3000 ரூபா அபாரம் அறவிடப்படவுள்ளது.
இதற்கென ஆட்பதிவு சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சட்டவிதிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய அடையாள அட்டையை பிணையாக வைக்க வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு எல்லா சந்தர்ப்பங்களிலும் தேசிய அடையாள அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Tuesday, 27 May 2008
காணாமல் போன அடையாள அட்டையொன்றை மீள வழங்குவதற்கு 3000 ருபா அபராதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment