Tuesday, 27 May 2008

ரஷ்யா – சென்னை : ரகசியமாய் வந்த யுரேனியம்-adhikaalai.com

Imageரஷ்ய விமானத்தில் நேற்று அதிகாலை ரகசியமாக திருவனந்தபுரம் வந்த யுரேனியம் 6 டிரக்குகளில் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் வழியாக கூடன்குளம் கொண்டு செல்லப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது. 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு பிரிவுகளின் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது. ஒப்பந்தப்படி இந்த அணு மின் நிலையத்துக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் யுரேனியம் எரிபொருளை ஆயுள் காலம் முழுவதும் ரஷ்யா வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

இந்த நிலையில் அணுமின் நிலையத்திற்குரிய யுரேனியத்தின் முதல் பகுதி Ôஐ.எல் 76Õ என்ற ரஷ்ய விமானத்தில் நேற்று அதிகாலை திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்த ஊழியர்களும், விமானத்தில் இருந்து டிரக்குகளில் யுரேனியத்தை இடமாற்றம் செய்தவர்களும் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தனர்.

விமானத்தில் இருந்து டிரக்குகளில் யுரேனியம் நேரடியாக மாற்றப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் கேரள மாநில போலீஸ் பாதுகாப்புடன் யுரேனியம் ஏற்றப்பட்ட டிரக்குகள் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக இரவு நேரத்தில் கூடன்குளம் கொண்டு செல்லப்பட்டது. மும்பை வழியாக வந்த விமானத்தில் யுரேனியம் கொண்டுவரப்படும் விஷயம் கடைசி வரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் மும்பையில் முடிக்கப்பட்டு அதன் பின்னரே திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. இதனால் திருவனந்தபுரத்தில் சிறப்பு சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை மட்டுமே நடந்தது.

மதுரையை விட திருவனந்தபுரம் விமான நிலையம் கூடன்குளத்திற்கு அருகே இருப்பதால் இவ்வழியில் விமானத்தில் யுரேனியம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாலையில் யுரேனியத்தை டிரக்குகளுக்கு மாற்றியதுமே அந்த விமானம் ரஷ்யா புறப்பட்டு சென்றுவிட்டது. மேலும் 14 விமானங்கள் ரஷ்யாவில் இருந்து யுரேனியத்தை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


http://www.adhikaalai.com/

No comments: