ஆடைத் தொழிற்றுறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் கோட்டாவை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் எதுவிதமான கோரிக்கையும் இதுவரை விடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன இணைப்பு மற்றும் தகவல்துறை தொடர்பான பிரதித் தலைவர் மாகொட் வெல்ட்ஸ்ஹோம், வெளிநாட்டு தொடர்பான ஆணையாளர் பெனீட்டா பொரோ மற்றும் வர்த்தக ஆணையாளர் பீட்டர் மெண்டெல்சன் ஆகியோரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜீ.எஸ்.பி. பிளஸ் கோட்டாவை தொடர்ந்து இலங்கைக்கு வழங்குமõறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது மேற்கண்டவாறு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோட்டாவை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் இதுவரையில் கோரிக்கை விடுக்கவில்லை.உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும். 2005ஆம் ஆண்டு ஜீ.எஸ்.பி. பிளஸ் கோட்டா வரித்துடைய நாடுகளினது தகுதிகளை பூர்த்தி செய்துள்ள ஏனைய நாடுகளுடன் இலங்கை கோரிக்கை விடுக்கும்போது கவனத்தில் கொள்ளப்படும்.
இக்கோட்டாவை நீடிப்பதற்கான கோரிக்கை அக்டோபர் மாதம் முடிவுக்கு முன்னர் முன்வைக்கப்பட வேண்டும். இது தொடர்பான விசாரணைகள் டிசம்பர் மாத நடுப்பகுதியில் முன்னெடுக்கப்படும். இவ்விசாரணைகளின் போது 2005ஆம் ஆண்டு தொடக்கம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான ஆடை தொழிற்துறை கோட்டாவான ஜீ.எஸ்.பி.யை நீடிக்குமாறும் இல்லாவிட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புக்களை இழக்க நேரிடுமென்றும் தெரிவித்துள்ளார்.
Tuesday, 27 May 2008
ஜி.எஸ்.பி. பிளஸ் கோட்டாவை நீடிக்குமாறு இலங்கை கோரவில்லை ரணிலிடம் ஐரோப்பிய ஒன்றியத்தினர் தெரிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment