Wednesday, 28 May 2008

பிறந்து ஏழு மாதங்கள் கடந்த தமது கைக்குழந்தையை நெருப்பிலிட்டுக் கொன்றதாக குழந்தையின் தாயும் தந்தையும் கைது

பிறந்து ஏழு மாதங்கள் கடந்த தமது கைக்குழந்தையை நெருப்பிலிட்டுக் கொன்றதாக குழந்தையின் தாயையும் தந்தையையும் ஜூன் மாதம் இரண்டாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய மஜிஸ்ரேட் நீதிமன்றத்தின் நீதவான் லங்க ஜயரத்ன உத்தரவிட்டார்.

ஏ.ஏ.என்டனி மைக்கல், ஏ இரேசா நில்மினி ரேணுகா என்ற தாயும் தந்தையும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் இருவரும் தமது சிறு குழந்தையை நெருப்பில் இட்டுக் கொன்றுள்ளதாக பொலீசார் குளியாப்பிட்டிய மஜிஸ்ரேட்டில் ஆஜர்படுத்தினர்.

கடந்த 22ம் திகதி இரவு நடைபெற்றதாக கூறப்படும் இந்த அனர்த்த சம்பவத்தில் இறந்த பிள்ளை அமரசிங்க ஆராச்சிலாகே பிறமால் என்னும் ஏழு மாத சிறுகுழந்தை ஆகும்.

தீக் காயங்களுடன் இருந்த குழந்தையின் மரண விசாரணையின்போது திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.பி.ஹெட்டி கமகே ஆரம்ப சாட்சியாளரை விசாரணை நடத்திய போது இம்மரணம் தொடர்பான சந்தேகங்கள் எழுந்தமையால் குளியாப்பிட்டி மஜிஸ்த்ரேட் நீதி மன்றத்துக்கு தெரிவி;த்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறைக்கு வந்து இறந்த குழந்தை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

மஜிஸ்ரேட்டின் உத்தரவுப்படி மரண விசாரணை நடத்திய குளியாப்பிட்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரி.கே.விஜயவர்த்தன அந்தக் குழந்தையின் மரணம் சம்பவித்திருப்பது முகம், மற்றும் வாய்ப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட அமுக்கம் காரணமாகவே நடந்துள்ளதாகவும் மூச்சுத் திணறியதால் மரணம் சம்பவித்திருப்பதாகவும்

கை, கால் உடம்பில் வேறு பகுதிகளிலும் ஆழமான பல்வேறு காயங்கள் அவை உயிருடன் இருக்கும் போது நிகழ்ந்தவையாக இருக்க வேண்டுமென்று வைத்திய அறிக்iகியல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: