பல்கலைக் கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பதற்கான 2007-2008 கல்வியாண்டுக்குரிய இஸட் வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமர நாயக்க தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியிலுள்ள 15 பல்கலைக் கழகங்களுக்கும் அவற்றோடு இணைந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கும் புதிய கல்வியாண்டில் 20000 மாணவர்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகங்களில் புதிய பாடநெறிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தினால் க. பொ. த. உயர்தர பரீட்சையின் மீளாய்வுப் பரீட்சைப் பெறுபேறுகளை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதமே வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதிலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இஸட் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டதும் மூன்று வார காலத்திற்குள் பல்கலைக்கழக அனுமதி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment