துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் கூட தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். |
முறிகண்டியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் பலியெடுக்கப்பட்ட மக்களின் வணக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2500 ஆண்டு காலமாக குருதி குடிக்கும் வெறியில் தமிழினத்தை சிங்களம் படுகொலை செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வெறி சிங்கள மக்களிடம் உறைந்து போய் உள்ளது. துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் தமிழனின் பச்சைக்குருதியை குடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது என்று அவர்களின் இதிகாசம் சொல்கின்றது. தேசத்தின் இருப்பில் இந்தப் படுகொலைச் செய்தி இடிக்கு மேல் இடியாக வந்து சேர்ந்தது. பாரதிபுரத்திலும் மலையாளபுரத்திலும் காற்று ஆடவில்லை. தமிழின அழிப்பு என்பது சிங்கள அரசின் வேர்களில் காலம் காலமாக உள்ளது. பெரும் புயல் காற்றில் விளக்குச்சுடர் அசைகின்ற மாதிரி நாம் அசைகின்றோம். இத்துயரத்தை அழுது கொட்டிய பின்னர் இந்தப் பெற்றோரை, உறவுகளை, இழந்தவர்கள் நாளைக்கு ஒளியாக மாறி பின் பொறியாக மாறுவார்கள். அவர்கள் தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க உதவுவார்கள். இந்த பசுந்தளிர்களை பக்குவமாக வளர்த்தெடுத்து சிங்கள அரசிற்கு தக்க பாடம் புகட்டவேண்டியது நமது கடமை என்றார். puthinam.com |
Wednesday, 28 May 2008
விகாரமாதேவி கருவுற்றிருந்த போதும் தமிழின அழிப்பு வெறி இருந்தது: க.வே.பாலகுமாரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment