பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகிய ஊடகவியலாளர்களை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணிப்புரியும் இவர்கள் இருவரையும், நிறுவனத்தின் பணிப்பாளர் ஊடாக கடந்த திங்கட் கிழமை அழைத்துள்ளார்.
பேச்சுவார்த்தை என தாம் அழைக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு செயலாளர் கட்டளையிடுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தது என தொழில்சார் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊடக நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, அரச படையினருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் விமர்ச்சிக்க வேண்டாம் எனவும் இராணுவத்தை நேசிக்கும் மக்கள் நாட்டில் இருப்பதாகவும் அவர்களினால் இந்த ஊடகவியலாளர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதனை தாம் பொறுபேற்க போவதில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் மறைமுக அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளாருடான இந்த சந்திப்பில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பந்துல பத்மகுமார, தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் குலுகல்ல ஆகியோரும் கலந்து கொண்ட போதிலும் அவர்கள் இது தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
இறுதியில் பாதுகாப்பு செயலாளரிடம் கருத்து தெரிவித்த பந்தல பத்மகுமார இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து தான் அதனை அறிவதாகவும் அது இந்த தற்போது தேவையற்றது எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று கூடிய 5 ஊடக அமைப்புகள் பாதுகாப்பு செயலாளரின் இந்த நடவடிக்கை மறைமுக அச்சுறுத்தல் என கருதி செயற்பட போவதாக தீர்மானித்துள்ளன.
த நேசன் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கிய பின்னர் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் பாதுகாப்பு செயலாளரின் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகிய ஊடகவியலாளர்கள், தொழில்சார் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தலைவர் மற்றும் செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.
Wednesday, 28 May 2008
கோத்தபாய ராஜபக்ஸ, சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகிய ஊடகவியலாளர்களை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment