கொழும்பு பொரளை லேடி ரிஜ்வே மகப்பேற்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து சிசுவொன்று கீழே வீசப்பட்டதனால் உயிரிழந்துள்ளது.
நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீழே வீசியெறிப்பட்ட குழந்தை இரண்டாவது மாடியின் சுவற்றில் பட்டு உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக குறித்த சிசுவின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் வந்த தாய், யாருமற்ற நேரத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆறாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து சிசுவை வீசியுள்ளதாகத் தெரியவருகிறது.
குறித்த சிசுவின் தாய் மனநலம் குன்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saturday, 3 May 2008
6ஆவது மாடியிலிருந்து வீசி தாய் தனது சிசுவை கொலை செய்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment