Saturday, 17 May 2008

முல்லைத்தீவு வற்றாப்ளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஏ 9 வீதி விசேடமாக திறக்கப்படவுள்ளது.

a-9-road.jpgவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்ளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஏ 9 வீதி விசேடமாக திறக்கப்படவுள்ளது. நாளை ஞாய்pற்றுக்கிழையன்று வவுணியாவுக்கு அப்பால் உள்ள அடியார்களின் நன்மை கருதி ஓமந்தை ஏ 9 வீதி முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் உறுதிப்படுத்தியுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தநிலையில் வழமையாக திங்கள்; முதல் வெள்ளிவரை திறந்திருக்கும் வீதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்திற்காக நாளை விசேடமாக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: