Saturday, 17 May 2008

அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் பாதுகாவலர்கள் தன்னை தாக்கியமைக்காக 10 லட்சம் ரூபா இழப்பீடு கோரி மனுத்தாக்கல்

அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் பாதுகாவலர்கள் தன்னை தாக்கியமைக்காக அமைச்சரிடம், 10 லட்சம் ரூபா இழப்பீடு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மையங்கனை தொகுதி முன்னாள் அமைப்பாளர் அதுல ரத்நாயக்க அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி பதுளை –மையங்கனை வீதியில் தூசண வார்த்தைகளால் பேசியதுடன் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் கண்மூடித்தனமாக தன்னை தாக்கியதாகவும், இதன் காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக ரத்நாயக்க தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


மின்வலு அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக மேன்முறையீடு நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பிரதிவாதிகளாக கந்தகெட்டிய காவல்துறை பொறுப்பாளர், பதுளை தலைமையக காவல்துறை பரிசோதகர், மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


அத்துடன் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்ற புலனாய்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: